News February 15, 2025
கரூரில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர் குண்டாஸில் கைது

கருப்பகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மல்லிகை கடையில் மண்ணெண்ணெய் நிரப்பி தீ பற்ற வைத்தது தொடர்பான வழக்கில் முகமது அன்சாரி என்பர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை பேரில் ஆட்சித் தலைவர் தங்கவேல் உத்தரவின்படி இன்று முகமது அன்சாரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News November 16, 2025
கரூர்: GPay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

கரூர் மக்களே, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 16, 2025
கரூர் மக்களே அரிய வாய்ப்பு!

கரூர் மண்மங்கலம் அடுத்து பண்டுதகாரன்புதூரில், கால்நடை பல்கலை கழக பயிற்சி மையத்தில், தமிழக அரசின், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், வரும், 19 முதல், 25ம் தேதி வரை, கட்டணம் இல்லாத நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள், 04324-294335, 73390-57073 எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம் என பயிற்சி மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
கரூர் அருகே பெண் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேல தாலியாம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி சம்பூரணம் 48. இவர் தனக்குச் சொந்தமான டிபன் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற சம்பூர்ணம் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.


