News August 7, 2024
கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட ‘மக்கள் குறைதீர் நாள் கூட்டம்’ வரும் 10-08-2024 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
கரூர்: வாக்களர் கவனத்திற்கு IMPORTANT

கரூர் மாவட்டம், 2002 வாக்காளர் பட்டியல் இல் உங்கள் வாக்காளர் விபரங்களை தேடும் வகைக்யில் கரூர் மாவட்ட நிர்வாக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. https://karur-electors.vercel.app/?tsc=AC152 இந்த இணையதளம் மூலமாக தங்களது 2002 வாக்காளர் விவரங்களை ஐந்து வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
News November 22, 2025
கரூரில் இந்த பகுதியெல்லாம் கரண்ட் இருக்காது!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பசுபதிபாளையம், பாலம்பாள்புரம், ஒத்தக்கடை, வெள்ளியணை ஆகிய துணை மின் நிலையத்தில் வருகிற 25-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் பசுபதிபாளையம், வடக்கு பசுபதிபாளையம், ராமாகவுண்டனூர், கொளந்தா கொளந்தாகவுண்டனூர். ஆதிமாரியம்மன் கோவில் தெரு, சுங்ககேட், எஸ்.பி. காலனி, வாங்கப்பாளையம், வெள்ளியணை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
News November 22, 2025
முதல் நிலைக் காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்: எஸ்பி உத்தரவு

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த பிரபாகரன் 35 என்பவர் காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டதாகவும், மேலும் அவரது நண்பருடன் அப்பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவின்படி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


