News April 18, 2025

கரூரில் பாலியல் பெண் புரோக்கர் கைது !

image

கோவை வீரகேரளத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர், சீரநாயக்கன்பாளையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பணம் எடுப்பதாக கூறி விட்டு, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கரை கைது செய்தனர்.

Similar News

News December 22, 2025

கரூரில் தட்டி தூக்கிய தவெகவினர்!

image

கரூர் கிழக்கு மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா ஆர்.புதுக்கோட்டை கிராமத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 80க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்வில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News December 21, 2025

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற (டிசம்பர் 26) காலை 11 மணிக்கு, மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கலெக்டர் தங்கவேல் அறிவிப்பின் படி, மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் அல்லது மனுக்களாக வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News December 21, 2025

கரூர்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்! DON’T SKIP

image

கரூர் மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை<> கிளிக் <<>>செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். இதை அதிகம் ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!