News February 17, 2025
கரூரில் நல திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்து, பிறகு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Similar News
News November 4, 2025
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கரூர், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் (Enumeration Form) இன்று (04.11.25) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு 04.12.25-க்குள் மீண்டும் பெறப்படும். இதில் இரட்டை படிவங்களை, பொது மக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்ட ஒரு படிவங்களை அலுவலரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
கரூர் டவுன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை

கரூர், 33/11 பாலம்மாள்புரம் துணைமின் நிலையத்தில் உள்ள 11 கிலோ மாரியம்மன் கோவில் பீடர், புதுத்தெரு, ஆலமரதெரு, கருப்பாயிகோவில் தெரு, மாவடியான் கோவில் தெரு. ஐந்துரோடு, தேர்வீதி, குருநாதன் தெரு., அனந்தராயன் கோவில் தெரு, மார்கெட், சர்ச் கார்னர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வினியோகம் இருக்காது. என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
News November 3, 2025
கரூர்: மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்

கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த கண்ணன் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து புதிய கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக விமல் ராஜ் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட மாவட்ட வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் நேரில் சந்தித்து பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.


