News August 8, 2024
கரூரில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.08.2024) நடைபெற்ற முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் முன்னாள் படைவீரர் நலன் துணை இயக்குநர் ஞானசேகரன் மற்றும் சமுகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம் ஆகியோர் உள்ளனர்.
Similar News
News December 13, 2025
கரூர்: வாக்கு இயந்திரங்களை பார்வையிட்ட ஆட்சியர்!

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், இ.ஆ.ப.,தலைமையில் இன்று (13.12.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், முதற்கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
News December 13, 2025
வெங்கமேடு பகுதியில் தூக்கு போட்டு பெண் தற்கொலை!

கரூர், வெங்கமேடு தங்கநகர் பகுதியில், சுசிலா(60), என்பவர் சில மாதங்களுக்கு முன்பாக கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் நேற்று மன விரக்தியில் இருந்த சுசிலா தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து வெங்கமேடு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News December 13, 2025
கரூர்: பண்ணை அமைக்க ஆசையா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் – ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


