News August 7, 2024
கரூரில் கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு முகாம்

கரூர் மாவட்டம் வெங்கமேடு செங்குந்தர் மஹாலில், 10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கைத்தறி கண்காட்சி துவங்கப்பட்டது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தொடங்கி வைத்தார். பின்னர் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டார். உடன் கைத்தறி உதவி இயக்குநர் திரு.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 1, 2025
கரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு <
News December 1, 2025
கரூர்: உங்கள் போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

சாலை விபத்து குறித்த அவசர உதவிக்கு: 1073
பேரிடர் மேலாண்மை உதவி: 1078
பெண்களுக்கான உதவி எண்: 1091
பெண்களுக்கான உதவி எண் (வீட்டில் நடக்கும் கொடுமைகள் குறித்து தெரிவிக்க) : 181
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து புகார் அளிக்க: 1098
சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்: 1363
காணாமல்போன குழந்தைகள் மற்றும் பெண்கள் புகாரளிக்க: 1094
News December 1, 2025
குளித்தலை அருகே நடந்த சம்பவம்!

குளித்தலை அருகே நெய்தலூர் காலனி கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் லாட்டரி சீட்டு விற்ற முதலைப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் (31), பெரியபனையூரை சேர்ந்த ஏழுமலை (57) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்


