News March 10, 2025

கரூரில் கல்லூரி மாணவி கடத்தல்!

image

கரூரில் பட்டப்பகலில் அரசு கல்லூரி மாணவியை, மர்ம நபர்கள் ஆம்னி வேன் மூலம் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈசநத்தம் பகுதியை சேர்ந்த மாணவி, தனது தோழிகளுடன் நடந்து சென்றபோது காரில் கடத்தப்பட்டுள்ளார். சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலை காதல் விவகாரத்தில் மாணவி கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2025

பித்தளை அண்டா ஏற்படுத்திய ரகளை: 7 பேர் மீது வழக்கு!

image

குளித்தலை அருகே கே.பேட்டையை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் கிருபானந்தன் பட்டவர்த்தியில் உள்ள தனது நண்பர் தாமு வீட்டில் பித்தளை அண்டா திருடி சென்றதாக அப்பகுதியை சேர்ந்தோர் சரமாரியாக அடித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பைக்கை பறித்துச் சென்றுள்ளனர். சாந்தி புகாரில் செல்வா, சேது, கௌதம், அழகேசன், கோபால், துரைப்பாண்டி, விக்னேஷ் ஆகிய 7 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 19, 2025

ஜாக்கிரதை ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

கரூர் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

News April 19, 2025

கரூர் மின்சாரத் துறை எண்கள் !

image

▶️உதவி செயற்பொறியாளர் வடக்கு/கரூர்: 9445854074
▶️உதவி செயற்பொறியாளர்/ நகர்ப்புறம்/கரூர்: 04324-240988
▶️உதவி செயற்பொறியாளர் /வெள்ளியணை: 04324-281224
▶️உதவி செயற்பொறியாளர்/ அய்யர்மலை: 04323-245397
▶️உதவி செயற்பொறியாளர்/ குளித்தலை: 04323-222075
▶️உதவி செயற்பொறியாளர்/ சிந்தாமணிப்பட்டி: 04323-251246
▶️உதவி செயற்பொறியாளர்/ புகளூர்: 04324-277288
உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!