News March 26, 2025

கரூரில் உள்ள ஜீவ சமாதி

image

கரூரில் உள்ள சுற்றுலாத் தளங்களிலேயே எவருக்கும் அதிகம் தெரியாத ஒரு அமைதியான இடம் ‘சதாசிவ பிரம்மேந்திர ஜீவ சமாதி’. கரூரில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள நெரூரில் காவேரி ஆற்றங்கரையில் இருக்கும் இந்த இடம், இங்கு வருபவர்களுக்குள் நிச்சயம் அமைதி உணர்வைக் கடத்தும். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஏற்கனவே சென்றவர்கள் தங்களின் அனுபவத்தை கீழே பகிரலாம்.

Similar News

News October 23, 2025

கரூரில் வெள்ள அபாய எச்சரிக்கை; ஆட்சியர் அறிவிப்பு

image

கர்நாடகா கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால், கரூர் மாவட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் உருவாக வாய்ப்புள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவித்துள்ளார். அரசு துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 23, 2025

கரூர்: டிகிரி போதும்.. India Post-ல் வேலை!

image

கரூர் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 29.10.2025 ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News October 23, 2025

கரூர் காவல்துறை எச்சரிக்கை!

image

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .“அதிக வேகம் கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலைகளில் 9498100780, காவல்துறை உதவி எண் 100, ஆம்புலன்ஸ் எண் 108 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!