News April 15, 2025
கரூரில் இலவச கூடைப் பந்து பயிற்சி !

கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் கூடைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் கோடைகால இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் இன்று(ஏப்.14) முதல் மே.15ஆம் தேதி வரை கரூர் மாவட்ட திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 6 – 18 வயது உட்பட்ட வீரர் , வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 989497960 என்கிற எண்ணை அணுகவும். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News November 3, 2025
கரூர்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

கரூர் மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க https://tnurbanepay.tn.gov.in/LandingPage.aspx# என்ற இணையதளம் சென்று உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 3, 2025
கரூரில் சோகம்: டாக்ஸி டிரைவர் தற்கொலை!

கரூர் பசுபதி பாளையத்தைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் சிவக்குமார். இவரது தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மன விரக்தி அடைந்த சிவக்குமார் நேற்று (நவம்பர் 2) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை!
News November 3, 2025
கரூர் மாணவிகளுக்கு உதவிய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் பவுன்டேஷன் சார்பில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, வைதீஸ்வரி, தர்ஷினி, மணிஷா ஆகிய மூன்று மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான கல்லுாரி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக, நடிகர் ரஜினி காந்துக்கு நன்றி தெரிவித்து, மாணவியர்களின் சார்பில் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது என கரூர் மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற பொறுப்பாளர் கீதம் ரவி தெரிவித்துள்ளார்.


