News August 25, 2024
கரூரில் அருவாளைக் காட்டி 3.1/2 பவுன் நகை பறிப்பு

கரூர்: சேர்வைக்காரன்பட்டி முள்ளிப்பாடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது மனைவியுடன் நேற்று டூவீலரில் கருங்குளம் அருகே வந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அருவாளை காட்டி அவரது மனைவியின் கழுத்தில் இருந்த 3.1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், வையம்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
கரூர் கலெக்டர் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை வெண்ணைமலையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பணியிடங்களை வழங்குகின்றன. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை இளைஞர்கள் கல்விச்சான்றுகள், ஆதார் மற்றும் சுயவிவரத்துடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.
News November 19, 2025
கரூர்: இனி அலைய வேண்டாம்!

கரூர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <
News November 19, 2025
கடவூர்: பாம்பு கடித்ததில் பெண் உயிரிழப்பு!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சென்னம்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி வசந்தா (50). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனது மற்றொரு வீட்டில் இருந்தபோது பாம்பு கடித்ததாகவும் பிறகு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் கணவர் வீரப்பன் அளித்த புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


