News February 12, 2025
கரூரில் அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வு

கரூர் மாவட்டத்தில்நாளை (13.02.2025)காலை 10.00 மணி அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்ச்சி பெறும் நாகம்பள்ளி, வேலம்பாடி, இளங்கனூர், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மூன்று தொகுதி எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள கலந்துகொள்ள உள்ளனர்.
Similar News
News April 20, 2025
வாழ்வில் ஏற்றம் தரும் கல்யாண விகிர்தீஸ்வரர்

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர் அருகே பிரசித்தி பெற்ற கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கல்யாண விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தோஷம், புத்திர தோஷம், பெண்களின் சாபம் போன்றவை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 20, 2025
கரூர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கரூர்- திருச்சி பிரிவில் உள்ள கரூர்-வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் பாலங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்-16812) நாளை மறுநாள் கரூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News April 20, 2025
கரூரில் இலவச விளையாட்டு பயிற்சி

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளம், கையுந்து பந்து, ஜூடோ,கூடைப்பந்து, கபடி மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான இலவச கோடைக்கால பயிற்சி முகாம் ஏப்ரல் 25 முதல் மே 15 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகட்திற்கு நேரடியாகவோ அல்லது 7401703493 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.