News March 21, 2024

கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

image

நிலக்கோட்டை அருகே நூதலாபுரம் கிராமத்தில் திண்டுக்கல் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைய உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணமாக அன்றைய தினம் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுகிறது என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 10, 2025

திண்டுக்கலில் பைக் திருட்டு; 3 சிறுவர்கள் கைது

image

திண்டுக்கல் நகரில் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்ட வழக்குகளை டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீசார் விசாரித்து, சிசிடிவி காட்சிகள் மூலம் தடயங்களை பின்தொடர்ந்தனர். விசாரணையில் திண்டுக்கல் மற்றும் வத்தலக்குண்டு பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. நடவடிக்கையை எஸ்பி பிரதீப் பாராட்டினார்.

News November 9, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் இன்று நவம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News November 9, 2025

திண்டுக்கல்: இலவச பயிற்சியுடன் விமான நிலையத்தில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!