News August 7, 2024
கருணாநிதி படம் பொறித்த நாணயம் வெளியீடு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, ரூ.100 மதிப்பிலான நாணயம் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக சென்னையில் கலைவாணர் அரங்கில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட உள்ளார்.
Similar News
News November 18, 2025
விக்டோரியா ஹால் நவ-20 ஆம் தேதி திறப்பு!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32 கோடியே 62 லட்சம் செலவில் விக்டோரியா பப்ளிக் ஹால் சீரமைக்கும் பணிகள் தொடங்கின. தற்போது இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. தரைத்தளத்தில் 600 பேரும், இடைத்தளத்தில் 600 பேரும், பால்கனியில் 200 பேரும் என மொத்தம் 1400 பேர் அமரும் வகையில் இடவசதி கொண்ட விக்டோரியா பப்ளிக் ஹாலை வரும் 20-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.
News November 18, 2025
தேர்தல் ஆணையம் மீது திமுக எம்.பி குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், `திமுக எடுத்து வைத்துள்ள கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கணக்கிட்டு படிவத்தை எப்படி நிரப்ப வேண்டும் என்பதில் மக்கள் பெரும் குழப்பம் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் படிவம் பூர்த்தி செய்த உதவி வருகிறார்கள்` என்றார்
News November 18, 2025
சென்னை அரசு நிறுவன எண்களை தெரிஞ்சிக்கோங்க

சென்னை தலைமை அஞ்சலகம்-044-28542947, பொது அஞ்சலகம் – 044-28542947, அரசு பொது மருத்துவமனை-044-25305000, மல்டி ஷ்பெஷாசிலிட்டி ஹாஸ்பிட்டல்-044-25666000, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்- 044-25281347, ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, IOB-28524171, இந்தியன் வங்கி-25233231, கனரா வங்கி-24346038, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. *நண்பர்களுக்கு பகிரவும்*


