News March 30, 2024
கருகல் நோய் தாக்குதலால் மல்லிகை பூ விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான கண்ணியப்பிள்ளைபட்டி, பிச்சம்பட்டி,கதிர் நரசிங்கபுரம் போன்ற பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மல்லிகைப் பூக்களில் கருகல் நோய் ஏற்பட்டு பூக்கள் பாதிக்கப்படுவதால் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்து வருவதால் பூ விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 22, 2025
தேனி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு<
News November 22, 2025
தேனி: தூக்குப் போட்டு தொழிலாளி தற்கொலை.!

வருஷநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயபிரகாஷ் கூலி தொழிலாளி. இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.மனைவி நாகஜோதி இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதாக கேள்வி பட்டு, தனியாருக்கு சொந்தமாக தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News November 22, 2025
தேனி: தூங்கிய பெண்ணிடம் செல்போன் பறிப்பு!

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (54). கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த லட்சுமியின் வாயை பொத்தி, அவரிடமிருந்த ரூ.10,000 மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


