News March 24, 2025

கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த <>லிங்க்கை <<>>கிளிக் செய்து பதிவு செய்யவும். ஷேர் செய்யுங்கள் மக்களே!

Similar News

News January 10, 2026

சென்னை: வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலி!

image

சைதாப்பேட்டையைச் சேர்ந்த கவரேஷ் (19), செனாய் நகரிலுள்ள வாகனங்கள் சுத்தம் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று அவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து வாகனத்தைச் சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற சக ஊழியர் ரஞ்சித்குமாரையும் மின்சாரம் தாக்கியது. தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார், கவரேஷின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

சென்னை: மெட்ரோ பனியால் துடிதுடித்து பலி!

image

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த முகேஷ் குமார் (22), போரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, மதுரவாயல் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் பணிக்கான பிரம்மாண்டமான கிரேன் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மெட்ரோ பணிகளுக்காக சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள், உபகரணங்கள் மீது முறையான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

News January 10, 2026

சென்னையில் இருந்து 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஜன. 9 ஆம் தேதி முதல் ஜன.14 ஆம் தேதி வரை மொத்தம் 22,792 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தினசரி இயங்கும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜன.09 ம் தேதி 3,142, ஜன.10ம் தேதி 3,122, 11ம் தேதி 2,347 பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம் சுமார் 11.35 லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!