News March 24, 2025

கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து பதிவு செய்யவும்.

Similar News

News December 4, 2025

திருவள்ளூர்: மின்சாரம் தாக்கி கொடூர பலி!

image

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டையை சேர்ந்தவர் ஆதிமூலம்(49). இவர் சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில், அப்பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. அதனைப் பழுதுபார்க்க சென்ற ஆதி மூலம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 4, 2025

திருவள்ளூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov<<>>.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 4, 2025

திருவள்ளூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!