News March 24, 2025
கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிக்கர், ஸ்கஃபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த லிங்க்கை <
Similar News
News July 6, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

செங்கல்பட்டு காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உங்கள் மொபைலில் ஆக்ஸிஜன், சர்க்கரை அல்லது ரத்த அழுத்தம் சரிபார்க்கும் அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் இச்செயலிகள் மூலம் கைரேகை நகலைப் பயன்படுத்தி ஆதார் மற்றும் வங்கிக் கணக்குகளிலிருந்து பண மோசடிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. சைபர் கிரைம் உதவிக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
News July 5, 2025
சிறந்த காவல் நிலையமாக அச்சரப்பாக்கம் தேர்வு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில், 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் காவல் நிலையத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் செங்கல்பட்டில் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம் அருகிலேயே சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருது, காவல் நிலையத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
News July 5, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (ஜூலை.5) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. காவலர்கள் இன்றைய 10 மணி முதல் காலை 6 மணி வரை வந்து பணியில் ஈடுபடுவார்கள். அந்த சமயத்தில் ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள் இத்தகைய மொபைல் எண்களை கண்டிப்பாக வைத்திருக்கவும்.