News March 24, 2025

கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிக்கர், ஸ்கஃபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த லிங்க்கை <>கிளிக் <<>>செய்து பதிவு செய்யவும். ஷேர் செய்யுங்கள் மக்களே!

Similar News

News October 31, 2025

செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (நவ.1) பள்ளிகள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை (நவ. 1) வேலை நாளாக இருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெறுவதால் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க*

News October 31, 2025

செங்கல்பட்டு காவல் துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

image

செங்கல்பட்டு காவல் துறை இன்று (அக்.31) வாகன ஓட்டிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓரத்தில் நிறுத்த வேண்டாம், மேலும் இரவு நேரங்களில் வண்டிகளை பார்க் செய்யும் போது நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இது முக்கியமான எச்சரிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.

News October 31, 2025

செங்கல்பட்டு இன்று இரவு பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (அக்டோபர்-31) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!