News May 7, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வு

image

மே தினத்தை யொட்டி CPIML லிபரேஷன் சார்பில் திங்கள் நகரில் ஒப்பந்த ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்; மாதம் 36 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாலை 4 மணிக்கு பேரணி நடைபெறுகிறது.
நாகர்கோவில் வெட்டூர்ணி மடத்தில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் வரை CITU, AITUC, JCTU சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

Similar News

News October 23, 2025

குமரியில் கப்பல் கேப்டன் உயிரிழப்பு

image

குமரி, கோடிமுனை பகுதி கப்பல் கேப்டன் கிளீட்டஸ் (50) கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அக்.20ம் தேதி நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதி லாட்ஜில் தங்கி இருந்தவர் நேற்று (அக். 21) அங்கு இறந்த நிலையில் காணப்பட்டார். கோட்டார் போலீசார் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் உடல் நலக்குறைவால் கிளீட்டஸ் இறந்தது தெரிய வந்தது.

News October 23, 2025

குமரி: மழைக்காலங்களில் இந்த App தேவை – ஆட்சியர் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் இயற்கை வானிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் TN-Alert App ஐ கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐ ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயனடையலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.30 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!