News May 7, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி 133வது நாளாக அரசு ரப்பர் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆலய ஊழியர் சங்கம் சார்பில் 7வது நாளாக போராட்டம்.
Similar News
News November 2, 2025
குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு 22 கோடியில் ராஜகோபுரம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசு ₹21.95 கோடி மதிப்பில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டுவதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் ராஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 2, 2025
குமரியில் வெற்றிப் பாதை பயிற்சி தேர்வு அறிவிப்பு

குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலினின் வெற்றிப்பாதை பயிற்சி மையத்தின் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு 3 நாளை (நவ.2) மாவட்ட ஆயுதப் படையில் நடைபெறும். இதில் தேர்வுக்கு தகுதி உள்ள அனைத்து இளைஞர்களும் கலந்து கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்பவர்கள் காலை 9.00 மணிக்கு நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படையில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
குமரி: இலவச தையல் இயந்திரம்., APPLY LINK

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


