News April 29, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 10 மணிக்கு நலவாரிய புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் உரிய காலத்தில் ஏற்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோணம் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் முன்பு INTUCஉண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.மாலை 4.30 மணி – CPI(M) சார்பில் களியல் சந்திப்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
Similar News
News December 20, 2025
குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் சஸ்பெண்ட்

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (58). இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அங்குள்ள 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக வந்த புகாரை அடுத்து அவர் மீது பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். மேலும், கல்வித்துறை அதிகாரிகள் சுந்தர்ராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
News December 20, 2025
குமரி: மனைவியை கத்தியால் குத்திய கணவன்

மார்த்தாண்டான் துறை மீன்பிடி தொழிலாளி வின்செண்ட்(37). இவரது மனைவி ராஜி. கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் வின்செண்ட் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனைவியின் மார்பில் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் குழித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராஜி அளித்தபுகாரின் பேரில் போலீசார் வின்செண்டை கைது செய்தனர்.
News December 20, 2025
குமரி: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

குமரி மாவட்ட வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,53,373 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <


