News April 9, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 10 மணி – சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளவை கண்டித்து நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு CPI(M)சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காலை 11 மணி – வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி CPI(ML) Red flagசார்பில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காலை 9:15 மணி – பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது.
Similar News
News December 13, 2025
குமரி: பேருந்தில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு!

கன்னியாகுமரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. (SHARE)
News December 13, 2025
குமரி வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

குமரி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000482, 9445000483 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News December 13, 2025
குமரியில் தொழிலாளி சடலமாக மீட்பு!

ஈசாந்திமங்கலம் ஞானதாசபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (57). பல தோப்புகளில் மரத்தில் இருந்து தானாக விழும் தேங்காயை எடுத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (டிச.12) காலையில் சீதப்பால் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிந்து அவர் எப்படி இறந்தார்? வேறு எதும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


