News January 12, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#இன்று(ஜன.11) காலை 10:30 மணிக்கு தடிக்காரன் கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் தடிக்காரன் கோணம் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 9 மணிக்கு விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் தின வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் நடைபெறுகிறது.
Similar News
News December 7, 2025
குமரி: ரயில் பயணிகள் கவனத்திற்கு… சிறப்பு ரயில்

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாளை பகல் 11.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் நாளை (டிச.8) தாம்பரத்தில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிச.9 அதிகாலை 4:15 மணிக்கு நாகர்கோவில்வரும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
News December 7, 2025
குமரியில் அடிக்கடி மின்தடையா? கவலை வேண்டாம்..!

குமரி மக்களே.. மழை உள்ளிட்ட பல்வேறு சமயங்களில் நமது பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இனி இது போன்ற மின்வெட்டு ஏற்பட்டால் உடனே 9498794987 என்ற எண்ணுக்கு கால்செய்து உங்கள் ஏரியாவில் எங்கு மின்தடை என தெரியப்படுத்துங்க. உடனே மின்சாரத் துறை அதிகாரிகள் வந்து மின்தடையை சரிசெய்து சீரான மின் சேவை கிடைக்க செய்வார்கள். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 7, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (டிச.7) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 43.29 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 68.24 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 11.55 அடி (18 அடி), சிற்றாறு 2 அணையில் 11.64 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 568 கனஅடி, பெருஞ்சாணிக்கு 213 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.


