News December 4, 2024
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்டத்தொழிலாளர் மருத்துவமனையில் மருத்துவரை நியமிக்க கோரி 9வது நாளாக இன்று ரப்பர் கழக தொழிற்சாலை முன் உண்ணாவிரதம். #காலை 11 மணிக்கு வங்கதேச இந்துக்கள் மீது நடக்கும் வன்முறை தாக்குதலை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு வங்கதேச இந்து மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம். #மாலை 5 மணி தக்கலை பகுதிகளில் தெருமுனை கூட்டம் நடக்கிறது.
Similar News
News November 21, 2025
குமரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (நவ. 21) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியாதவர்களக்கு SHARE செய்து உதவுங்க.
News November 21, 2025
குமரி: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <
News November 21, 2025
நாகர்கோவிலில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி

மாநில அளவிலான யூத், ஜூனியர், சீனியர் ஆண்கள்,பெண்கள் பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நவ.28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள முன்னணி பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை நடத்த 20-க்கும் மேற்பட்ட தேசிய நடுவர்களும், 25-க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் வருகை தருகின்றனர்.


