News October 25, 2024
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய நிகழ்வுகள்
➤ நாகர்கோவில் BSNL அலுவலகம் முன்பு இன்று(அக்.,25) காலை 10 மணிக்கு 4G, 5G சேவையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். ➤ கோணம் அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பகல் 1 மணிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டோர் பணி நியமனம் செய்வதை கண்டித்து வாயிற் முழக்கப் போராட்டம். ➤ மாலை 4 மணிக்கு திருவட்டாரில் நா.த.க.வினர் உறுப்பினர் சேர்க்கை முகாம்.➤ மாலை 4 மணி மனிதநேய மக்கள் கட்சி இளைஞரணி பொதுக்கூட்டம்.
Similar News
News November 20, 2024
குமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் குமரி உட்பட நாகை, நெல்லை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
News November 20, 2024
நெல்லை: மழை எச்சரிக்கை விடுத்த காவல்துறை!
குமரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு மழை எச்சரிக்கை இன்று விடுத்துள்ளது. அதில், மழைக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மெதுவாகவும், கவனமாகவும் செல்ல வேண்டும். தண்ணீர் சூழ்ந்த இடங்களில் சென்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெள்ளம் சம்மந்தப்பட்ட பொதுமக்களை பயமுறுத்தும் தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்.
News November 20, 2024
TV, PHONE-ல் பொழுதை போக்கக்கூடாது: கலெக்டர் அழகு மீனா
தமிழக முதல்வரின் ‘உங்களை தேடி உங்கள் ஊர்’ திட்டத்தின் படி இன்று, திருவட்டார் தாலுகா பகுதிகளில் குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஆய்வு மேற்கொள்கிறார். காலை 9 மணிக்கு திருவட்டார் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். அங்கு மாணவ மாணவிகளிடம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், டி.வி, மொபைல் போன்ற கருவிகளில் பொழுதை போக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.