News March 29, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தின் இன்றைய நிகழ்வுகள்

image

1.குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 2. காலை 10 மணிக்கு பழங்குடியின மக்களின் நான்காவது மாநில மாநாடு பேச்சிப்பாறையில் நடைபெறுகிறது. 3. மாலை 4 மணிக்கு மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட்டை கண்டித்து கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு சிபிஐ எம் எல் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற உள்ளது.

Similar News

News November 14, 2025

கன்னியாகுமரி – ஹைதராபாத் ரெயில் நீட்டிப்பு

image

தெற்கு மத்திய ரெயில்வே 8 சிறப்பு ரெயில்களின் இயக்கத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமைகளில் இயங்கும் ரெயில் எண் 07230 ஹைதராபாத் – கன்னியாகுமரி சிறப்பு ரெயில் டிச.3 முதல் ஜன. 21.ம் தேதி வரையும், வெள்ளிக்கிழமைகளில் இயங்கும் ரெயில் எண் 07229 கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரெயில் டிச.5.ம் தேதி முதல் ஜன.23.ம்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு நேற்று துவங்கியது.

News November 14, 2025

குமரியில் பெண்கள் உட்பட 1067 பேர் கைது

image

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதத் தங்கராஜை கண்டித்து குமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் உட்பட மாவட்டத்தில் 23 இடங்களில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் பங்கேற்ற 144 பெண்கள் உட்பட 1067 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் MLA எம்ஆர் காந்தி ஆகியோர் அடங்குவர்.

News November 14, 2025

குமரி: போக்சோ வழக்கில் 40 பேர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின்.
இந்த வருடத்தில் மட்டும் 40 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!