News May 15, 2024
கன்னியாகுமரி மழைப்பொழிவு விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திற்பரப்பு பகுஹ்டியில் 5 செ.மீட்டரும், களியல் பகுதியில் 3 செ.மீட்டரும், பேச்சிப்பாறை, சிற்றாறு – 1, இரணியல், பாலமோர், அடையாமடை, முக்கடல் அணை ஆகிய பகுதிகள் 1 செ.மீட்டர் அளவு மழைப்பொழிவு பதிவானது.
Similar News
News October 14, 2025
குமரி: 1200 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தல்

கொல்லங்கோடு போலீசார் மிக்கேல் காலனிபுரம் பகுதியில் நேற்று (அக்.13) வாகன சோதனையில் ஈடுபட்டபோது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும். 1,200 லிட்டர் மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. காரில் மண்ணெண்ணையுடன் 37 கேன்களை பறிமுதல் செய்த போலீசார், கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த அமீன் (38), ஷாஜகான் (39) ஆகியோரை கைது செய்தனர்.
News October 14, 2025
குமரி: பைக் விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழப்பு

கடந்த வாரம் குளச்சல் கொட்டில்பாட்டை சேர்ந்த +2 மாணவர் சுர்ஜின் (17) அவரது நண்பர்கள் அஸ்வின், ரிஜோ ஆகியோருடன் பைக்கில் செல்லும் போது வெள்ளியாகுளத்தில் மரத்தில் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுர்ஜின் நேற்று முன் தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளச்சல் போலீசார் விசாரணை.
News October 14, 2025
குமரியில் மரவள்ளி கிழங்கால் அதிசியம்

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே உள்ள விவசாயியான ஜெனிஷ் என்பவருடைய தோட்டத்தில் ஒரு ஆளின் அளவு நீளமுடைய சுமார் 40 கிலோ எடை கொண்ட மரவள்ளிக்கிழங்கு இயற்கை முறையில் விளைந்துள்ளது. ஜெனிஷின் வீட்டில் இன்று (அக். 13) பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இந்த அதிசய மரவள்ளிக்கிழங்கை அப்பகுதியில் சுற்றுவட்டார ஊர்மக்கள் பார்த்து செல்கின்றனர்.