News October 25, 2024
கன்னியாகுமரி மக்களுக்கு MLA வேண்டுகோள்

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முழு கொள்ளளவை எட்டியுள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது ஆகவே தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் MLA வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News January 10, 2026
குமரி: மூதாட்டி மீது பைக் மோதி விபத்து..!

குமரி மாவட்டம், உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (60). இவர் நேற்று முன் தினம் முட்டை விற்பதற்காக உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நின்று உள்ளார். அப்போது முதலார் பகுதியை சேர்த்த ஜெனிஸ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி உள்ளது. இதில் சரஸ்வதி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் போரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 10, 2026
குமரி: 10th போதும்… ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

குமரி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு<
News January 10, 2026
குமரி: கோயில் நகையை அபேஸ் செய்த EX.அறங்காவலர்

கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (44). இவர் அப்பகுதியில் உள்ள தம்பரான் கோயில் – முத்தாரம்மன் கோயிலில் அறங்காவலராக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சாமிகளுக்கான 45 பவுன் நகைகளில், 21 பவுன் நகைகளை திருடி அடகு வைத்த விவரம் தற்போது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தற்போதைய கோயில் அறங்காவலர் சேத்திரபாலன் போலீசில் அளித்த புகாரின் பேரில் அய்யப்பனை நேற்று (ஜன.9) போலீசார் கைது செய்தனர்.


