News May 8, 2024
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் சிறப்பு!
கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயில் 108 சக்தி பீடங்களில் ஒன்றாகும். புராணக் கதைகளைக் கொண்ட இக்கோயில் 2000 – 3000 ஆண்டுகள் பழைமையானது. கல் சுவரால் கட்டப்பட்ட இக்கோயிலில், சூரிய தேவன், விநாயகர், ஐயப்பன், பால சுந்தரி மற்றும் விஜய சுந்தரி ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன. கடலோரத்தில் அமைந்துள்ள இக்கோயில் கன்னியாகுமரியின் பழமையை பறைசாற்றும் விதத்தில் அமைந்திருக்கிறது.
Similar News
News November 20, 2024
நெல்லை: மழை எச்சரிக்கை விடுத்த காவல்துறை!
குமரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு மழை எச்சரிக்கை இன்று விடுத்துள்ளது. அதில், மழைக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மெதுவாகவும், கவனமாகவும் செல்ல வேண்டும். தண்ணீர் சூழ்ந்த இடங்களில் சென்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெள்ளம் சம்மந்தப்பட்ட பொதுமக்களை பயமுறுத்தும் தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்.
News November 20, 2024
TV, PHONE-ல் பொழுதை போக்கக்கூடாது: கலெக்டர் அழகு மீனா
தமிழக முதல்வரின் ‘உங்களை தேடி உங்கள் ஊர்’ திட்டத்தின் படி இன்று, திருவட்டார் தாலுகா பகுதிகளில் குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஆய்வு மேற்கொள்கிறார். காலை 9 மணிக்கு திருவட்டார் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். அங்கு மாணவ மாணவிகளிடம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், டி.வி, மொபைல் போன்ற கருவிகளில் பொழுதை போக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
News November 20, 2024
குமரி தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் சொந்த வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களது நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரத்தில் 288 கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.