News March 29, 2024
கன்னியாகுமரி அருகே கோர விபத்து

குமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே லாயம் சந்திப்பில் இன்று கனிம வளங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி சாலை ஓரத்தில் நின்ற டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி அருகாமையில் இருந்த வீட்டின் மதில் சுவரை இடித்து நின்றது. இந்த விபத்தில் கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் முழுவதும் சேதமடைந்தது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
Similar News
News September 14, 2025
குமரி அரசு பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்!

குமரி மாவட்டம், இரணியலை சேர்ந்த வின்சென்ட்-கெர்லின் ஜெர்மன் தம்பதி இவர்கள்து பேரனுக்கு உடல் நலம் பாதிக்கபட்டது. எனவே சிகிச்சைக்காக கெர்லின் ஜெர்மன் பேரனுடன் கருங்கல் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8.75 பவுன் நகையை திருடியுள்ளனர்.இதுக்குறித்து கெர்லின் ஜெர்மன் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்த விசாரணை.
News September 14, 2025
மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10 கோடி இழப்பீடு

நாகர்கோவிலில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில் காசோலை குற்ற வழக்குகள், மோட்டார் விபத்து வழக்குகள் மற்றும் குடும்பத்த தகராறு வழக்குகள் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டன. இந்த நீதிமன்றத்தின் மூலம் பரிசீலிக்கப்பட்ட 2519 வழக்குகளில் 1839 வழக்குகள் தீர்க்கப்பட்டு மொத்தம் ரூ.10 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாக குமரி சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
News September 13, 2025
குமரி: அனைத்து வரிகளும் இனி ஒரே லிங்க்கில்

கன்னியாகுமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <