News March 28, 2024

கன்னியாகுமரி அருகே இளம்பெண் தற்கொலை

image

மார்த்தாண்டம் அடுத்த பழுக்கல் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (40) எலக்ட்ரீசியன், இவரது மனைவி சித்ரா தேவி (36) வீட்டில் தூக்கில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர். 

Similar News

News April 15, 2025

நாகர்கோவிலில் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமானது நாளை(16.04.2025) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இதில் 30க்கும் அதிகமான, புகழ்மிக்க நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவைப்படும் தகுந்த நபர்களை வேலைக்கு தேர்வு செய்ய இருக்கிறார்கள் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி குமாரகோவில் சுவாமி தரிசனம்

image

திருச்சூர் எம்.பியும் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் மற்றும் நடிகருமான சுரேஷ்கோபி இன்று குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். 

News April 15, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறந்த உணவுகள்

image

1956 ஆம் ஆண்டு கன்னியாகுமரி, திருவிதாங்கூரில் இருந்து தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது இங்குள்ள உணவு வகைகள் கேரள உணவு வகைகளை ஒத்திருக்கும். அதில் சிறந்தவைகள் :
▶️கப்பா
▶️ரச வடை
▶️சத்யா
▶️அவல் (வெட்டன் ரைஸ்)
▶️அவியல்
▶️முந்திரி கொத்து
▶️வாழை சிப்ஸ்
▶️பழ பஜ்ஜி
▶️பலாப்பழ சிப்ஸ்
▶️ஆயினி சக்கை *ஷேர் பண்ணுங்க (உங்களுக்கு தெரிந்த உணவுகளை குறிப்பிடலாம்)

error: Content is protected !!