News April 22, 2025
கன்னியாகுமரி: அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை “1800 599 1500” இந்த கட்டணமில்லா இலவச நமபரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
Similar News
News April 22, 2025
குமரி மாவட்டத்தின் வரலாறு

குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.மு.1500 முதல் 1000 ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரியின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது.தற்போதைய குமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.கி.பி. 276-ல் இந்தியாவில் விஜயம் செய்த எநாஸ்தனிஸ் என்பவரின் குறிப்பேட்டிலும் குமரி பற்றிய பதிவு உள்ளது.
News April 22, 2025
நாகர்கோவிலில் கோடைகால பயிற்சி முகாம் – ஆட்சியர்

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (ஏப்.22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரி மாவட்டத்தில் கோடைகால பயிற்சி முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இம்மாதம் 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை 21 நாட்கள் நடைபெற உள்ளது. தடகளம், கால்பந்து, கைப்பந்து, வாள் சண்டை மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.
News April 22, 2025
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது

மார்த்தாண்டம் அருகே உள்ள நவுரிகாட்டு விளையில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடந்து வருவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு இன்று (ஏப்.22) தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து நடத்திய அதிரடி சோதனையில் ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக முகேஷ் (47) என்பவர் சிக்கினார். மேலும்,இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.