News October 24, 2024
கனிமொழி வாகனத்தை மறித்த சிறுவர்கள் வைத்த கோரிக்கை

ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பெரியதாழை கிராமத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றார். அப்போது அந்தப் பகுதி சிறுவர்கள் வாகனத்தை மறித்து விளையாடுவதற்கு கைப்பந்து வாங்கி தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். உடனடியாக சிறுவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி கடைக்கு அழைத்து சென்று கைப்பந்து வாங்கி கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
Similar News
News February 23, 2026
தூத்துக்குடி: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா? <
News February 23, 2026
தூத்துக்குடி வரும் முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் குமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக விமான மூலம் நாளை (24) காலை தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவருக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
News February 23, 2026
BREAKING தூத்துக்குடி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தூத்துக்குடி மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் 6,71,742 ஆண் வாக்காளர்கள், 7,04,689 பெண் வாக்காளர்கள் மற்றும் 193 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். மேலும் மாவட்டத்தில், மொத்தம் 960 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.


