News March 1, 2025
கனிமொழி எம்பி சுற்றுப்பயணம்

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாளை (2) பகல் 12 மணிக்கு தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை பார்வையிடுகிறார். அதன்பின் வட வல்லநாட்டில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். அதனை எடுத்து உப்பாற்று ஓடையில் வெள்ளத் தடுப்பு பணிகளை ஆய்வு செய்யும் அவர் தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவ மனை கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.
Similar News
News March 3, 2025
தூத்துக்குடி விவசாயிகளுக்கு..மார்ச் 15 வரை அவகாசம்!

தூத்துக்குடி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் அலுவலகம் நேற்று(மார்ச் 2) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 42,174 விவசாயிகளின் நில உடமை மட்டுமே வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யாதோர் மார்ச் 15க்குள் பதிவு செய்திடுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News March 3, 2025
TUTICORIN – பெயர் மாற்றப்படுமா?

தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஆங்கில உச்சரிப்பு கொண்ட ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்புக்கு ஏற்றபடி மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியின் ஆங்கில பெயர் ‘TUTICORIN’ என்பது ‘THOOTHUKUDI-‘ஆக பெயர் மாற்றப்பட்டுள்ளது. எனினும் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தில் பழைய பெயர்தான் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
News March 3, 2025
கனிமொழி எம்பி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று (3)பரிவள்ளிக்கோட்டை பஞ்சாயத்து கள்ளத்தி கிணறில் காலை 10:30 மணிக்கு 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயநல கூட்டத்தை திறந்து வைக்கிறார். அதன் பின் அங்குள்ள பொது விநியோக கூடம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள உணவு கூடம் போன்றவைகளையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.