News April 12, 2025
கனிமங்கள் எடுத்து செல்ல ஆன்லைன் மூலம் அனுமதிச் சீட்டு

சென்னை மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணியில் கிடைக்கப்பெறும் மண், சக்கை கல் உள்ளிட்ட கனிமங்களை அப்புறப்படுத்துவதற்கு வரும் 28-ந் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சீட்டுகள் மூலம் கனிமங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது என சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 15, 2025
சென்னையில் மீன் பிடிக்க தடை

சென்னையில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் ஏப்.14 நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. விசைப் படகுகளுக்கு மட்டுமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டாா் பொருத்தப்பட்ட செயற்கை இழுவை படகுகள், நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கத் தடையில்லை. மேலும், மீனவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.8,000 வழங்கப்படுகிறது.
News April 14, 2025
சென்னையில் இன்றைய இரவு காவலர்கள் விவரம்

சென்னையில் இன்று (14.04.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள, உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 14, 2025
ALERT: சென்னையில் வெயில் சதமடிக்கும்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், கடலோரப் பகுதிகளில் வெப்பக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்தில் படி படியாக வெப்பம் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னை, புறநகரின் ஒரு சில பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவாக கூடும் எனவும் எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.