News August 16, 2024
கனரக லாரிகள் செல்ல கட்டுப்பாடு விதிப்பு

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அதிகளவிலான கனரக லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 முதல் மாலை 3 மணி வரை, இரவு 10 முதல் காலை 6 மணி வரை, சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை கனரக லாரிகள் செல்ல கட்டுப்பாடு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு

தமிழ்நாட்டில் தனித்துவமான வேளாண் பொருட்களை கண்டறிந்து அவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. புளியங்குடி (தென்காசி) எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, செட்டிகுளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை ஆகிய 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
நெடுவயலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் டிச.06 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் A.K.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.