News March 11, 2025
கனமழையால் வனப்பகுதிக்கு செல்ல தடை விதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. மாவட்ட ஆட்சியரும் இன்று பொதுமக்களுக்கு அறிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காளிகேசம் சுற்றி உள்ள மலை பகுதியில் அதிகமான மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா தலமான காளிகேசம் செல்ல பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
Similar News
News March 12, 2025
குமரியில் வேலை தேடுவோர் கவனத்திற்கு

குமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், இம்மாதம் 22ஆம் தேதி நாகர்கோவில் பயோனியார் குமார் சுவாமி கல்லூரியில் காலை 9 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வினை நடத்துகிறது என ஆட்சியர் தெரிவித்தார். நண்பருக்கு பகிரவும்
News March 12, 2025
குமரி-பெங்களூர் ரயில் பெங்களூர் கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது

பெங்களூர் கிழக்கு ரயில் நிலையத்தில் 3 மற்றும் 4 ரயில் பாதைகள் அமைப்பதற்கான தளங்கள் இடிக்கப்பட்டுள்ளதால், இந்த நிலையத்தில் பயணிகளை கையாள முடியாது என்பதை தொடர்ந்து கன்னியாகுமரி கே எஸ் ஆர் பெங்களூர் விரைவு ரயில் நாளை (மார்ச் 13) முதல் பெங்களூர் கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்த ரயில் நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் நீக்கப்படுகிறது. share it
News March 12, 2025
ஆற்றுக்கால் பொங்கல் விழா – சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நாளை(மார்ச் 13) தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலக செய்திக் குறிப்பில் இன்று கூறப்பட்டுள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.