News April 7, 2025

கத்தியை காட்டி மிரட்டிய போதை ஆசாமி

image

ராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பால பகுதியில் கத்தியை காட்டி ஒருவர் அப்பகுதி மக்களிடம் பணம் பறித்துள்ளார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் போதை ஆசாமியை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்.பின் மக்களே சேர்ந்து அவரை விரட்டினர். இதனால் அந்த பகுதில் நடமாட மக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் எதுவும் செய்யாமல் சென்றதால் பொதுமக்கள் போலீசார் மீதும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Similar News

News April 8, 2025

ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக இன்று (ஏப்.08) ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழையா கமெண்ட் பண்ணுங்க. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News April 8, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் 

image

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விபர பட்டியல் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை மற்றும் திருவாடானை பகுதிகளில் இன்று (ஏப்ரல்.07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து அதிகாரிகள் மற்றும் அலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண்கள் 83000 31100 (அ) 100ஐ அணுகவும்.

News April 7, 2025

நேர்த்தி கடன் செலுத்த வினோத உடை

image

கமுதி, செங்கப்படை கிராமத்தின் காவல் தெய்வமான அழகு வள்ளியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழாவில் சாக்குகளை பேண்ட் & சட்டை வடிவில் அணிந்து கொண்டு முகத்தையும் மூடிய படி ஊர்வலத்தில் கலந்து கொள்வர். முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டபோது கும்மி மேள தாளங்களுடன் சாக்கு ஆடை அணிந்த பக்தர்களும் நடனம் ஆடி செல்வர். இதனை கிராம மக்கள் நேர்த்திகடனாக செலுத்தி வருகின்றனர். *ஷேர்

error: Content is protected !!