News November 15, 2024
கத்தியை காட்டி பணம் பறித்த 3 கொள்ளையர்கள் கைது
வெள்ளமடம் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் ஐடி நிறுவன ஊழியரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூபாய் 2 லட்சத்தை 3 பேர் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரில், திருநெல்வேலியை சேர்ந்த லட்சுமணன்(30), மேலபட்டாளம் பகுதியை சேர்ந்த கொட்டியப்பன்(35), திருநெல்வேலி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த அஸ்வின்(20) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 19, 2024
குமரியில் திடீர் ஆய்வு – 11 கடைகளுக்கு அபராதம்
குமரி பேரூராட்சி & உணவு பாதுகாப்பு துறை இணைந்து குமரியில் உள்ள கடைகள், தற்காலிக உணவு கடை என 60 கடைகளில் இன்று (நவ.19) ஆய்வு நடத்தியது. இதில் 7 கிலோ பிளாஸ்டிக் பை, 18 கிபிளாஸ்டிக் தட்டுகள் பறிமுதலுடன், காகிதத்தில் வைத்த 5 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா உணவு அழிக்கப்பட்டன. சுகாதாரமற்ற 3 உணவகங்களுக்கு ரூ. 3000 அபராதமும், பிளாஸ்டிக் வைத்திருந்த 8 கடைகளுக்கு தலா 2000 வீதம் ரூ.16000 அபராதம் விதிக்கப்பட்டது.
News November 19, 2024
கிறிஸ்மஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் நீட்டிப்பு
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதைப் போன்று தாம்பரத்திலிருந்தும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
News November 19, 2024
குமரி கடலில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நாளை தொடக்கம்
இந்திய கப்பல்படை, இந்திய கடலோர காவல் படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஆகியவை இணைந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக குமரி கடலில் நாளையும் நாளை மறுநாளும் (நவ.20,21) 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. 42 கடற்கரை கிராமங்கள் கண்காணிக்கப்படுகிறது.