News October 10, 2024

கதாநாயகனாக மீண்டும் களமிறங்கும் மிஷ்கின்?

image

அஞ்சாதே, பிசாசு, சைக்கோ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் இயக்குநர் மிஷ்கின். அஞ்சாதே உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கிய அவர் நந்தலாலா படத்தை இயக்கியதுடன் அதில் நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த நிலையில், அவர் மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குநர் கோகுல் இயக்கவுள்ள இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Similar News

News December 10, 2025

ஒரே நாளில் விலை ₹8,000 உயர்ந்தது… புதிய RECORD

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹8 உயர்ந்து ₹207-க்கும், கிலோ வெள்ளி ₹8,000 உயர்ந்து ₹2,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அக்.15-ல் புதிய உச்சத்தை தொட்ட வெள்ளி விலை, பின் படிப்படியாக குறைந்தது. அதன்பின் சர்வதேச சந்தை எதிரொலியால் மீண்டும் விலை அதிகரித்த நிலையில், இன்று ஒரே நாளில் ₹8,000 உயர்ந்துள்ளது.

News December 10, 2025

ப்ரீ புக்கிங்கிலேயே சாதனை படைக்கும் படையப்பா!

image

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 12-ம் தேதி ‘படையப்பா’ படம் ரீ-ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை கொண்டாட ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பது ப்ரீ புக்கிங்கிலேயே தெரிகிறது. இன்னும் படம் வெளியாக 2 நாள்கள் உள்ள நிலையில், தற்போது வரை சுமார் ₹30 லட்சத்துக்கு டிக்கெட்கள் புக்காகி இருக்கிறதாம். அதிக வசூலை அள்ளிய ரீ-ரிலீஸ் படமாக ‘படையப்பா’ மாறும் என விநியோகஸ்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News December 10, 2025

தமிழகத்தின் ‘டாப் 7’ அமானுஷ்ய இடங்கள்!

image

மனிதனை எப்போதும் பயமுறுத்தும் விஷயம் பேய். அல்லுவிட்டாலும், பேய் படத்தை பார்ப்பவர்கள் விரும்புபவர்கள், வாழ்க்கையில் அந்த அமானுஷ்ய அனுபவத்தை பெற யாரும் விரும்புவதில்லை. ஆனால், தமிழகத்தின் இந்த இடங்களுக்கு சென்றால், நீங்கள் பேய் அனுபவத்தை பெறலாம் என சிலர் குறிப்பிடுகின்றனர். அவை எந்தெந்த இடங்கள் என அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்யவும். உங்களுக்கு பேய் அனுபவம் இருக்கா?

error: Content is protected !!