News April 9, 2025
கதவை திறந்து தூங்காதிங்க – தென்காசி காவல்துறை விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; தென்காசி மாவட்ட மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்க வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சொந்த மாவட்டம் மக்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 5, 2026
தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 5, 2026
சங்கரன்கோவிலில் திடீர் போக்குவரத்து மாற்றம்

சங்கரன்கோவில் – ராஜபாளையம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடை பெறுகிறது. எனவே இன்று (ஜன.5) இரவு முதல் நாளை (ஜன.6) காலை வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து ராஜபாளையம், ஸ்ரீவி., கம்பம், குமுளி செல்லும் வாகனங்கள் புளியங்குடி, அச்சம்பட்டி வழியாக செல்லவும், ஸ்ரீவி. ராஜபாளையம் வரும் வாகனங்கள் களப்பாகுளம் வழியாக சங்கரன்கோவில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 5, 2026
தென்காசி: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

தென்காசி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!


