News April 9, 2025

கதவு இல்லா கருவறையுடன் அமைந்துள்ள அற்புத ஆலயம்

image

பிரமிக்க வைக்கும் விதத்தில் செங்கல்பட்டு அருகே திருவடி சூலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம். கோபுரம் மேலிருந்து பார்க்க ஸ்ரீசக்கரம் போல தோற்றமளிக்கின்றது. இந்த கோயிலில் ஸ்ரீ மகா பைரவர் மூலவராக அமைந்துள்ளதோடு, கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணர் சந்நிதி, ஹனுமன் சந்நிதி, ஹோம மண்டபம், பெளர்ணமி மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. கதவு இல்லா கருவறையுடன் பயம் போக்குகின்ற பைரவராக காட்சி தருகின்றார். ஷேர்

Similar News

News November 27, 2025

செங்கல்பட்டு: பைக் திருடிய இருவர் கைது

image

குரோம்பேட்டை குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் பவுல் ஜோசப் என்பவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது. இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருட்டில் ஈடுபட்ட குரோம்பேட்டையை சேர்ந்த மதன் (20) மற்றும் அவரது நண்பர் சண்முகம் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 27, 2025

செங்கல்பட்டு: சிறப்பு ரயில் அறிவிப்பு!

image

திருவண்ணாமலை, கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் டிச. 3ம் தேதி தாம்பரம் – திருவண்ணாமலை- தாம்பரம் இடையே முன்பதிவில்லா மெமு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் படி தாம்பரத்தில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1:30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும், மறுமார்க்கமாக மாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

News November 27, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவ.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!