News March 23, 2025
கண் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீனிவாச பெருமாள்

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாளை வழிபட்டதன் மூலம் மீண்டும் பார்வை பெற்றதாகக் கூறப்படுகிறது. இப்போதும் கூட, கண் பிரச்சனைகள் உள்ள எவரும் இங்குள்ள பெருமாளை வழிபட்டால் அது குணமாகும் என்று மக்கள் நம்புகிறார்கள். திருமணமாகாத மற்றும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான பிரஹ்தன ஸ்தலம் இது என்றும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 22, 2025
செங்கல்பட்டு: ரோடு சரியில்லையா? 72 மணிநேரத்தில் தீர்வு

செங்கல்பட்டு மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்
News October 22, 2025
செங்கல்பட்டு: தேள் கொட்டி விவசாயி பலி

செய்யூர் அடுத்த, வீரபோகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், விவசாயியான இவர் கடந்த அக். 5-ந்தேதி, காலை தனது நிலத்தில் விவசாய பணி மேற்கொண்டிருந்தார். அப்போது தேள் ஒன்று பாண்டியனின் வலது கையில் கொட்டியுள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாண்டியன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News October 22, 2025
செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.