News August 16, 2024
கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்

வடபாதிமங்கலம் அருகே கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையற்றார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜெகதீசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
Similar News
News September 19, 2025
தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம்

பனை மரத்தை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என்று அறிவிப்பை அரசாணையாக வெளியிட வேண்டுமென பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அரசாணை எண் 238/12.09.2025 மூலம் பனையை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்க நிறுவனர் பருத்திசேரி ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 18, 2025
திருவாரூர்: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

திருவாரூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..