News March 23, 2025

கண்மாயில் தவறி விழுந்து ஒருவர் பலி

image

திருவாடானை, கோடனுாரை சேர்ந்தவர் மகாலிங்கம்(47). நேற்று முன்தினம் முதல் மகாலிங்கத்தை காணாமல் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கண்மாய் நீரில் மகாலிங்கம் தலையில் அணிந்திருந்த தொப்பி மிதந்ததுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மகாலிங்கம் உடலை மீட்டனர். கண்மாயில் கை, கால் கழுவ சென்ற போது தவறி விழுந்து அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News March 31, 2025

ராமநாதபுரம்: ரூ.80 லட்சம் மதிப்பிலான கடல்அட்டைகள் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தென் கடலில் இந்திய கடலோரக் காவல் படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கடற்கரையில் தலா 40 கிலோ வீதம் 5 கேன்களில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ கடல் அட்டைகளை கைப்பற்றினர். கைப்பற்றிய கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ. 80 லட்சம் என இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

News March 31, 2025

இராமநாதபுரம் சரக டிஐஜி பதவியேற்பு

image

இராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த அபினவ் குமார் ஐபிஎஸ் மதுரை சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து திருநெல்வேலி சரக டிஐஜியாக பணியாற்றி வந்த  மூர்த்தி ஐபிஎஸ் இராமநாதபுரம் சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மார்ச்.31) இராமநாதபுரத்தில் புதிய டிஐஜியாக பதவியேற்று கொண்டார்.

News March 31, 2025

மோடி வருகையை கண்டித்து போராட்டம்

image

பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.6 அன்று திறந்து வைத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். இந்நிலையில் மோடி வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மார்ச்.31) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!