News March 25, 2025
கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த கோர சம்பவம்!

இராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர் அருகே, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 70 வயது முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 14, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ரானிப்பேட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத் தொழில்நுட்பங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த 6 மாதப் பயிற்சி முகாமில், விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தகவல்களுக்கு, விவசாயிகள் தங்களது பகுதி கால்நடை உதவி மருத்துவரை அணுகிப் பயனடையலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News September 14, 2025
ராணிப்பேட்டை: அதிரடி தீர்வு, ரூ. 4.35 கோடி இழப்பீடு

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 72 வழக்குகள் மீது சமரச தீர்வு எட்டப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 4.35 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. நீதிபதிகள் முனுசாமி மற்றும் பூர்ணிமா முன்னிலை வகித்தனர். பல்வேறு வழக்குகள், விபத்து காப்பீடு தொகை வழக்குகள் நடைபெற்று சமரச தீர்வு எட்டப்பட்டது.
News September 14, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்.14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு 9884098100 என்ற எண்ணில் அழைக்கலாம்