News February 16, 2025
கண்ணமங்கல கண்மாயில் மீன்பிடித் திருவிழா

வகுத்தெழுவன்பட்டி கண்ணமங்கல கண்மாயில் தண்ணீர் வற்றியதால் தண்ணீர் மீண்டும் நிரம்பி முழுமை பெற வருண பகவானை வேண்டும் விதமாக மழை வரம் வேண்டி நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது கண்மாய் கரையில் நின்று ஊர் பெரியவர்கள் வெள்ளை வீச அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.இதில் கெழுத்தி, கட்லா உள்பட போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
Similar News
News July 9, 2025
சிவகங்கை: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <
News July 9, 2025
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத் திட்டத்தில் 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகின்ற 12.07.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும்

திருப்புவனம்: அஜித்குமார் காவல் மரணம் வழக்குடன் அவர் மீதான திருட்டு வழக்கையும் சேர்த்து சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரி மற்றும் விசாரணை குழுவில் இடம் பெறும் சிபிஐ காவலர்களையும் சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்தில் நியமித்து விசாரணையை தொடங்கி ஆக.20-க்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என (ஜூலை-08) இன்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.