News February 16, 2025
கண்ணமங்கல கண்மாயில் மீன்பிடித் திருவிழா

வகுத்தெழுவன்பட்டி கண்ணமங்கல கண்மாயில் தண்ணீர் வற்றியதால் தண்ணீர் மீண்டும் நிரம்பி முழுமை பெற வருண பகவானை வேண்டும் விதமாக மழை வரம் வேண்டி நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது கண்மாய் கரையில் நின்று ஊர் பெரியவர்கள் வெள்ளை வீச அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.இதில் கெழுத்தி, கட்லா உள்பட போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
Similar News
News November 9, 2025
காரைக்குடி மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

காரைக்குடி தொகுதிவாக்காளா் பதிவு அலுவலா் தொடர்பு எண்கள; தேவகோட்டை சாா் ஆட்சியா்- 9445000470, காரைக்குடி வட்டாட்சியா் – 9445000648, தேவகோட்டை வட்டாட்சியா்-9445000649, காரைக்குடி மாநகராட்சி ஆணையா்- 7397382168, தேவகோட்டை நகராட்சி ஆணையா் -7397382165, காரைக்குடி தொகுதி வாக்காளர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு வாக்காளர் சீட்டை சரி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
சிவகங்கை: காவலர் தேர்வு மைய வரைபடம் வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (நவ-9) நாளை சிவகங்கை, காரைக்குடியில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் தேர்வு நடைபெறும். 5 மையங்களான அழகப்பா கல்லூரிகள், டாக்டர் உமையாள் ராமநாதன் கல்லூரி, கம்பன் கற்பகம், நியூ மகரிஷி வித்யா மந்திர் ஆகியவற்றில் 4329 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். பழைய/புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலிருந்து வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
News November 8, 2025
சிவகங்கை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

சிவகங்கை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


