News March 6, 2025
கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து: 2 பேர் பலி

வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனேஸ் ரெட்டி, ஸ்ரெயர்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 மாணவர்கள் 1 மாணவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
செங்கல்பட்டு: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே <
News December 1, 2025
செங்கல்பட்டு: பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து

தாம்பரம் பல்லிக்கரணை, ராதா நகரில் உள்ள அடுக்குமாடி பர்னிச்சர் கடையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. 9 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ பிடித்ததா என பல்லிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 1, 2025
செங்கல்பட்டு: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


