News February 16, 2025
கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரத்தில் இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி பிரபாகர் மற்றும் நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவர் ஓட்டிச் சென்றனர். அப்போது அவர்களது பைக் நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் பிரபாகர் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
Similar News
News November 28, 2025
திண்டுக்கல் காவல்துறையின் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்கள் சமூக வலைதள பக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (நவ.28) இன்று” சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் நட்புக் கொள்வதை தவிர்ப்போம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
News November 28, 2025
திண்டுக்கல்: இனி அலைய தேவையில்லை!

திண்டுக்கல்லில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், www.tnpds.gov.in இணையதளம் மூலம் மின்னணு அட்டை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்தால், 30-40 நாட்களுக்குள் விண்ணப்ப நிலை குறித்து அரசு தகவல் வழங்கும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும். இதை அனைவருக்கும் SHAER பண்ணுங்க!
News November 28, 2025
திண்டுக்கல்லில் சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த லட்சுமணன்பட்டி, பேட்டரி ஸ்கூல் அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


